தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் டெல்லி பயணம்

0 1165

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீரென டெல்லி சென்றுள்ளார். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் பன்வாரிலாலின் டெல்லி பயணம் கவனம் பெற்றுள்ளது. பயணத்தின் போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆளுநர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்கள், நீட் தேர்வு எதிர்ப்பு, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நடத்த உள்ள போராடடம், 7 பேர் விடுதலை பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments