அரசு மருத்துவமனையில் தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை

0 845

உத்தரபிரதேச மாவட்ட அரசு மருத்துவமனை ஒன்றில், நோயாளிகளை தரையில் படுக்க வைத்து குளுக்கேஸ் ஏற்றும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூரில் மாவட்ட அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை, மருத்துவர்கள் தரையில் படுக்க வைத்து, குளுக்கேஸ் ஏற்றி வருகின்றனர். மேலும் குளுக்கோஸ் பாட்டில்களையும் மருத்துவமனையின் ஜன்னல்களில் தொங்கவிடுகின்றனர்.

இந்த காட்சிகள் தற்போது வலைதளங்களில் பரவி, கண்டனத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை மருத்துவ அதிகாரி பி.எஸ். நாகர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments