ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா

0 255

யுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களையும், வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தொழில்நுட்பகளையும், இந்தியாவிற்கு வழங்க, அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. 

எதிரியின் ஏவுணை மற்றும் மறைவிடங்களை, 400 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கி அழிக்க வல்ல S-400 ரக ஏவுகணைகளை, ரஷ்யாவிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்கிறது. இதற்கான கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் S-400 ரக ஏவுகணை அமைப்பிற்கான தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தங்களில், இந்தியாவும் - ரஷ்யாவும் கையெழுத்திட்டுள்ளன.

தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டு தாக்கி அழிக்க வல்ல S-400 ரக ஏவுகணை அமைப்பை, ரஷ்யாவிடமிருந்து, இந்தியா பெறுவதற்கு, அமெரிக்கா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தது. இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாகவும், அமெரிக்கா மறைமுகமாக எச்சரித்திருந்தது. இருப்பினும், ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு உறுதியாக உள்ளது.

இதனால், வேறுவழியின்றி, தனது தளவாடங்களை இந்தியாவிடம் வழங்க அமெரிக்கா தானாக முன்வந்துள்ளது. இந்த வகையில், ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வழங்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக, வாஷிங்டனில் பேசிய டிரம்ப் நிர்வாக அதிகாரிகள், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களின் தேவை, இந்திய பாதுகாப்புத்துறைக்கு அதிகரித்திருப்பதாக கூறியுள்ளனர். இதன் அடிப்படையிலும், அமெரிக்காவின் விற்பனை முயற்சிக்கு இந்தியா இசைவு தெரிவித்திருப்பதாலும், ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை, இந்தியாவிற்கு வழங்க, டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியிருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, ஒருங்கிணைந்த வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு வழங்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும், வெள்ளை மாளிகை கூறியிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments