தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் வேட்பு மனு தாக்கல்

0 534

வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவுள்ள பாண்டவர் அணியினர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

சென்னை தியாகராயநகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்திற்கு பொதுச் செயலாளர் விஷால் தலைமையில் துணை தலைவர் பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் குஷ்பு, கோவை சரளா, விக்னேஷ், மனோ பாலா, ஜூனியர் பாலய்யா உள்ளிட்டவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், நடிகர் சங்கத்திற்கான பொது சொத்தை காப்பாற்றும் முயற்சியிலேயே  தேர்தலில் களம் இறங்கவுள்ளதாகவும், இதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments