ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை

0 5304

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம்  ஆஸ்திரேலியா வீரர்கள் கவனமாக இருக்கவேண்டும் என அந்நாட்டு அணியின் துணை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். 

இரு அணிகளுக்கும் இடையே ஞாயிறு அன்று லண்டன் ஓவல் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில், ரிக்கி பாண்டிங் தமது டுவிட்டர் பக்கத்தில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அதிவேக பவுன்சர் பந்துகளால் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் வீழ்ந்ததை சுட்டிக்காட்டி உள்ளார்.

அதேபோன்ற யுக்தியை ஓவலில்  நடைபெற உள்ள போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT