புழுதிப்புயல், மின்னல் தாக்கியதில் 26 பேர் உயிரிழப்பு

0 2127

உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் புழுதிப்புயல், மின்னல் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

மெய்ன்புரி, ஃபருக்காபாத், மொராதாபாத், மதுரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாழனன்று இரவு புழுதிப்புயல் வீசியது. இதனால் ஓரிரு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சரிவரப் பொருத்தப்படாத விளம்பரப்பலகைகள் காற்றில் பறந்து சென்று சாலையில் சென்றோர் மீது விழுந்ததில் காயமடைந்தனர்.

சில இடங்களில் மண் வீடுகள் இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் அதில் உறங்கிக் கொண்டிருந்தோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். நேற்று 16 ஆக இருந்த பலி எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 26 ஆக உயர்ந்தது.

படுகாயமடைந்த 57 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைஅளிக்கப்படுகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments