நீதித்துறையின் உத்தரவுகளை நீதித்துறையே பின்பற்றாததது வேதனை - நீதிபதிகள்

0 912

தடையை விலக்கக்கோரும் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

இடமாறுதல் தொடர்பாக 2011 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் மீது தீர்ப்பளித்த நீதிபதிகள், நீதித்துறையின் உத்தரவை நீதித்துறையே பின்பற்றாததது வேதனையானது எனக் கூறினர்.

இடமாறுதல் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீதான நீதித்துறை ஆய்வு சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், நிர்வாக காரணங்களுக்காக வழக்கமாக செய்யப்படும் இடமாறுதலில் உயர் நீதிமன்றம் தலையிட்டால் நிர்வாகப் பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்றனர். அதற்கு எதிரான மனுக்களை உயர்நீதிமன்றம் ஊக்குவிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர்.

அதேபோல் இடைக்கால தடையை நீக்கக்கோரும் மனுக்களை 2 வாரத்தில் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். தடையை விலக்கக்கோரும் மனுக்களை விசாரணைக்கு பட்டியலிடுவது தொடர்பாக உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பிறப்பித்த உத்தரவுகளை  பதிவுத்துறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments