பாண்டவர் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையில் புதிய அணி போட்டி..!

0 1945

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையிலான அணியினர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

2019- 2022 -ம் ஆண்டிற்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தற்போது நடிகர் சங்க நிர்வாகிகளாக இருந்து வரும் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்திக் உள்ளிட்ட அதே நிர்வாகிகள் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாண்டவர் அணியினரை எதிர்த்து கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியாக நடிகர்கள், நாடக நடிகர்கள் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும், பொது செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணை தலைவர் பதவிகளுக்கு குட்டி பத்மினி மற்றும் உதயா, செயற் குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு பூர்ணிமா பாக்யராஜ், பாண்டியராஜன், சங்கீதா, நடிகர்கள் விமல், சாம் மற்றும் பரத் உள்ளிட்ட 24 பேர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments