ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் - சச்சின் எச்சரிக்கை

0 1511

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணி மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என சச்சின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமது வலைதள பக்கத்தில், ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் டேவிட் வார்னர், ஸ்டீவ் சுமித் ஆகியோர் மீண்டும் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர், ரன் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். அந்த அணியினரின் பந்துவீச்சும் சிறப்பாக உள்ள நிலையில் இரு அணிகளும் மோத உள்ள ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் இந்திய அணி வீரர்கள் எச்சரிக்கையுடன் விளையாடவேண்டும் என்று டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments