தவறான முடிவால் விக்கெட்டை இழந்த கெயில்

0 572

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், நடுவர்களின் தவறான முடிவு ஏமாற்றம் அளிப்பதாக இருந்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கார்லஸ் பிரத்வெயிட் ((Carlos Brathwaite)) கூறியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்த போது, மிட்சேல் ஸ்டார்க் வீசிய 5வது ஓவரின் 5வது பந்தில் கிறிஸ் கெயில் விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

அந்த ஓவரின் 4வது பந்தை மிட்சேல் ஸ்டார்க் நோபாலாக வீசியதை நடுவர்கள் கவனிக்கவில்லை. அதனை நோபால் என அறிவித்திருந்தால் அடுத்த பந்து ப்ரீ ஹிட்டாகி இருப்பதோடு கிறிஸ் கெயிலின் விக்கெட்டும் தப்பி இருக்கும்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரத்வெய்ட், நடுவர்களின் முடிவு ஏமாற்றம் அளித்ததாகவும் பலமுறை டிஆர்எஸ் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments