ஆஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் பலபரீட்சை

0 738

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டி நாட்டிங்காம்மில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் விளையாடிய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. அந்த போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் பேட்டிங்கில் கலக்க, பந்துவீச்சாளர்களும் எதிரணியை வெறும் 207 ரன்களுக்கு சுருட்டினர். எனவே இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி எந்த மாற்றமும் இன்றி களமிறங்க வாய்ப்பு இருக்கிறது.

ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் இத்தொடரில் தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. அந்த போட்டியில், பாகிஸ்தான் அணியை வெறும் 105 ரன்களில் சுருட்டி மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தல் அபார வெற்றியடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள், அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

ரசிகர்களின் ஆதரவை பெற்ற இரு அணிகளும் வெற்றியை தொடரும் நோக்குடன் களமிறங்க இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments