தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணி அறிவிப்பு

0 979

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தச் சங்கத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நாசரும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

துணை தலைவர்கள் பதவிக்கு பூச்சிமுருகன், கருணாஸ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், குட்டி பத்மினி, கோவை சரளா மனோபாலா, பிரசன்னா, குஷ்பூ, நிதின் சத்யா, சரவணன் ஆதி உள்ளிட்ட 26 பேர் போட்டி போடுகின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT