பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விறுவிறுப்பு

0 487

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு பெடரர், நடால் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர். 

கால்இறுதிப் போட்டியில் ஸ்விஸ் வீரர்களான பெடரரும், வாவ்ரின்காவும் மோதினர். இந்தப் போட்டியில் 7-6, 4-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி பெடரர் வெற்றி பெற்றார்.


மற்றொரு கால்இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ஜப்பான் வீரர் நிஷிகோரியை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில் 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் நடால் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் வெற்றி பெற்றுள்ள ரோஜர் பெடரரும், ரபேல் நடாலும் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments