முல்லைப்பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்புக் குழு ஆய்வு

0 410

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முல்லை பெரியாறு அணையில் பருவ மழைக்காலங்களில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டது.

மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு பிரதான அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளில் நீர்க்கசிவு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியன், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments