நிதிஷ் குமார் தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் தனக்கு ஆட்சேபனை இல்லை -ராப்ரி தேவி

0 687

நிதிஷ் குமார் தங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முன்வந்தால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராப்ரி தேவி தெரிவித்துள்ளளார்.

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தன. இதனையடுத்து பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார், மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் நிதிஷ் குமார் மீண்டும் தங்களுடன் கூட்டணி வைக்க முன்வந்தால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் ஆனால் கூட்டணி குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள் என்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியும் எம்எல்ஏவுமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments