உலகக்கோப்பை தொடரில் இலங்கை - ஆப்கானிஸ்தான் மோதல்

0 382

உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது 

இந்தாண்டு உலகக்கோப்பை தொடரில் வெற்றிக்கணக்கை துவங்காத இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின் நைப் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆப்கானிஸ்தான் அணி எந்த மாற்றமும் இன்றி களமிறங்கிய நிலையில், இலங்கை அணியில் ஜீவன் மண்டீசுக்கு பதிலாக நுவான் பிரதீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இலங்கை அணியின் வீரர்கள் களம் இறங்கி பேட்டிங் செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT