நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது..!

0 480

ருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

நாடு முழுவதும் 154 நகரங்களிலும், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 14 நகரங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டு, கடந்த மே மாதம் 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.

இந்தியா முழுவதும் 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேரும், தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் நீட் தேர்வை எழுதினர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி,தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, கன்னடம், ஒடிசா உள்ளிட்ட 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx, https://www.mcc.nic.in/ ஆகிய இணைய தளங்களில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT