இறந்த யானையின் தந்தங்கள் வெட்டி கடத்தல்?

0 268

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே இறந்த யானையின், தந்தங்களை வெட்டி கடத்தியவர்களை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி புறம்போக்கு நிலத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, 25 வயது மதிக்கத்தக்க யானை இறந்து கிடந்ததும், அதன் இரு தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதில், குடற்புழு நோய் தாக்கி யானை உடல்நலம் குன்றி உயிரிழந்தது தெரிந்தது.

இதனை பயன்படுத்தி தந்தங்களை வெட்டி கடத்தியவர்களை கண்டுபிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், மோப்ப நாய் உதவியுடன் மலைகிராமங்களில் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments