சொத்திற்காக தந்தையே மகனை அடித்து கொன்ற விபரீதம்

0 1020

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சொத்திற்காக தந்தையே மகனை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பெரவள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் தனது தந்தை அரசு தொகுப்பு வீடு கட்ட பணம் இல்லாத போது  பணம் கொடுத்து வீட்டை முழுமையாக கட்டியுள்ளார்.  இந்நிலையில் தந்தை ரவி மகனை தொகுப்பு வீட்டில் இருந்து வெளியேறுமாறு கூறி வந்தது தொடர்பாக  இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு காவல் நிலையம் சென்று சமரசம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை தொகுப்பு வீடு தொடர்பாக மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஹரிதாஸை  அவரது தாய் விஜயலட்சுமி மற்றும் தந்தை உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த ஹரிதாஸை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கவரைப்பேட்டை போலீசார் ரவி மற்றும் விஜயலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments