நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான இரு மாநிலங்கள்

0 6926

நாட்டிலேயே, அதிகபட்சமாக, 48 டிகிரி செல்சியஸ் வெப்பம், இருவேறு மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா மண்டலத்திற்கு அருகில் உள்ள சந்திராபூரில், புதன்கிழமையன்று, 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதேபோன்ற, கொடுமையான வெப்பம், ராஜஸ்தான் மாநிலத்திலும் பதிவாகியுள்ளது.

மேற்கு ராஜஸ்தானில் உள்ள சுரு நகரில், வியாழக்கிழமை, 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டுமின்றி, தலைநகர் டெல்லியிலும், அதிகபட்ச வெப்பநிலை, மாறி மாறி பதிவாகி வருகிறது. டெல்லியில், வியாழக்கிழமை, 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

வருகிற 2ஆம் தேதி, அதாவது திங்கட்கிழமை வரையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும், குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர், சந்திராபூர், பிரம்மபுரி, வர்தா ஆகிய பகுதிகளிலும், ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு, பைக்காநெர், ஸ்ரீகங்காநகர் ஆகிய இடங்களிலும், கிழக்கு மத்திய பிரதேசத்திலும், 47 டிகிரி செல்சியல் வரையிலான வெப்பம் பதிவாகும் என, இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments