முழுமையாக குணப்படுத்தாமல் அனுப்பி வைத்து விட்டதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மீது புகார்

0 1033

சென்னை கோயம்பேட்டில் அமில வீச்சுக்குள்ளானவர்கள், ஆறாத காயங்களுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர். 

கோயம்பேடு முனியப்பா நகரில் கன்னியப்பன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். நகை பட்டறையில் பணிபுரியும் கன்னியப்பனின் வீட்டிற்கு எதிர் வீட்டில், கோயம்பேடு சந்தையில் பணிபுரியும் 8 பேர் வாடகைக்கு தங்கி இருந்தனர்.

கடந்த 19ஆம் தேதி குடிபோதையில் இருந்த கன்னியப்பனுக்கும், அந்த 8 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. கன்னியப்பனை தாக்க அவர்கள் முயன்ற போது, நகைகளை கழுவும் அமிலத்தை எடுத்து 8 பேர் மீதும் கன்னியப்பன் வீசினார். இதில் அலறித் துடித்த 8 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் கன்னியப்பனை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஆறாத காயங்களுடன் வந்து இன்று சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், நான்கு நாட்கள் மட்டுமே சிகிச்சை அளித்துவிட்டு தங்களை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம், எல்லா நோயாளிகளையும் காயங்கள் முழுமையாக குணமடையும் வரை வைத்து பார்க்க முடியாது என்றும் அதற்கு மருத்துவமனையில் இடமும் இல்லை என கூறியுள்ளது.

அவர்களுக்கு மருத்துவ உதவிகள் மீண்டும் தேவைப்பட்டால் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனவும் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments