இந்திய ஓபன் குத்துச் சண்டை போட்டியில் மேரிகோம் அபாரம்

0 790

இந்திய ஓப்பன் குத்துச்சண்டை போட்டியில், மேரி கோம் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை வன்லால் டுடியை எளிதில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனது வசமாக்கினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவி 60 கிலோ எடை பிரிவில் 3-2 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை சிம்ரன்ஜித் கவுரை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இதேபோல், ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் சச்சின் சிவாச்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments