குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயங்கர தீ விபத்து

0 1410

குஜராத் மாநிலம், சூரத் நகரில், பயிற்சி மைய கூடம் ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர். 

குஜராத் மாநிலம் சூரத் நகரில், சார்த்தனா பகுதியில், தனியார் டுட்டோரியல் மற்றும் வரைகலை பயிற்சி மையம் ஒன்று உள்ளது. இதன் மூன்றாவது தளத்தில், வெள்ளிக்கிழமை பகல் பொழுதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் சிக்கிக் கொண்ட மாணவர்கள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, அங்குமிங்கும் அலைபாயத் தொடங்கினர். ஒருவழியாக, கண்ணாடி தடுப்புகளை உடைத்துக் கொண்டு, உயிர் பிழைக்க எண்ணி, மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்தனர்.. காண்போரை பதைபதைக்கச் செய்யும் இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

18 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி, தீயை அணைத்தனர். ஏசி இயந்திரத்தில் உள்ள சர்க்யூட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததே, இந்த கோர விபத்துக்கு காரணம் என தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர். 15க்கும் மேற்பட்ட மாணவர்களை பலி கொண்டிருக்கும் பயங்கர தீ விபத்து சம்பவத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 4 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்திருக்கிறார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments