2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள் விளையாடும்

0 1666

கத்தார் நாட்டில் 2022ம் ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் 48 அணிகள் விளையாட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஃபிஃபாவின் கத்தார் தலைமைச் செயல் அதிகாரி அல் காதர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் மட்டுமே விளையாடி வந்த நிலையில் அதனை அதிகப்படுத்து முயற்சிகள் நடப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக 48 அணிகளை களமிறக்குவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறிய அவர், அதற்காக உலகக் கோப்பை கால்பந்து சம்மேளனத்துடன் பேசி வருவதாகவும், பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்ட பின் இதற்கான நடைமுறைகள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பான முடிவை ஃபிஃபா அடுத்த மாதம் 5ம் தேதி அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments