சென்னை அடையாற்றில் விழிப்புணர்வு படகுப் போட்டி

0 812

சென்னை அடையாற்றில் மெட்ராஸ் போட் கிளப் சார்பாக அடையாறு, கூவம் உள்ளிட்ட நதிகளின் தூய்மை விழிப்புணர்வை மையப்படுத்தி படகுப் போட்டி நடைபெற்றது..

சென்னை அடையாறு புரோக்கன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து, மெட்ராஸ் போட் கிளப் வரை மூன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு படகுப் போட்டி நடைபெற்றது. நான்கு பிரிவுகளாக நடைபெற்ற, இந்த படகுப் போட்டியில் 32 படகுகளில் 120 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அடையாறு, கூவம் மற்றும் கொசஸ்தலை ஆகிய ஆறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், வீடுகள், கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக ஆறுகளில் கலக்க கூடாது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், படகுப்போட்டி நடத்தப்படுவதாக, மெட்ராஸ் போட் கிளப் அங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும், இந்த படகுப் போட்டியில் கலந்து கொண்டுள்ள வீரர்களுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments