47 நாடுகளின் கலைஞர்கள் பங்கேற்ற கலாச்சாரத் திருவிழா

0 977

ஆசிய கலாச்சாரத் திருவிழா சீனாவில் கோலாகலமாகத் தொடங்கியது. ஆசியாவின் நாகரிகம், கலாச்சாரம் போன்ற நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் திருவிழாவை சீன அதிபர் ஸி ஜின்பிங் தொடங்கி வைத்தார். இளைஞர்களின் கொண்டாட்டம் ஆசியாவின் கனவு என்ற தலைப்பில் நடக்கும் இந்த திருவிழா உலகில் பல்வேறு நாடுகளின் கலாச்சார நிகழ்வுகள் ஒரே இடத்தில் வண்ணமயமாக அரங்கேறின.

இந்தத் திருவிழாவில் முக்கிய விருந்தினராக பிரபல நடிகர் ஜாக்கிசான் பங்கேற்று குங்ஃபூ சண்டையின் சில அசைவுகளை செய்து காட்டினார்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த திருவிழாவை கண்டு ரசித்தனர். வரும் 22ம் தேதி வரை நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் ஆசியா கண்டத்தில் உள்ள 47 நாடுகளின் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments