வெனிசுலாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்த அமெரிக்கா

0 1748

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவுடன் அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அந்நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெனிசுலாவின் தேசிய சபை தலைவர் யுவான் குவாய்டோ தம்மை அந்நாட்டின் அதிபராக அறிவித்துக் கொண்டார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிபர் நிக்கோலஸ் மதுரோ இருந்த போதும், அவர் வாக்குகளை முறைகேடாக பெற்றதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அவர் பதவி விலக போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில் குவாய்டோ இவ்வாறு அறிவித்ததையடுத்து அமெரிக்கா உடனடியாக ஆதரவு அளித்தது. 50க்கும் மேற்பட்ட நாடுகளும் குவாய்டோவை அதிபராக அங்கீகரித்த போதிலும், தமக்கு ராணுவத்தின் ஆதரவு இருப்பதாகக் கூறி அதிபர் மதுரோ பதவி விலக மறுத்து விட்டார்.

அமெரிக்காவின் தலையீட்டால்தான் அமைதியற்ற சூழல் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்து வந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments