முதன்முறையாக ஏவுகணை ஏற்றுமதிக்கு தயாராகும் இந்தியா

0 893

தென் கிழக்கு ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகளுக்கு முதல் முறையாக ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தயாராக இருக்கிறது.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ராணுவ தளவாடப் பொருட்கள் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அதில் கலந்து கொண்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.கே. ஐயர், ஏவுகணை ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் செய்வதற்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள் பல இந்தியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக குறிப்பிட்டார். வளர்ந்து வரும் சிறிய நாடுகள் புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஏவுகணைகள் வாங்க விரும்புவதாக அவர் கூறினார்.

இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments