2கி.மீ நடந்து மரக்கன்றுகளை காக்கும் கிராம மக்கள்..!

0 1399

தஞ்சை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தேக்கு மரக்கன்றுகளுக்கு 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி காப்பாற்றி வருகின்றனர் கிராம பெண்கள். 

image

தஞ்சை மாவட்டத்தை புரட்டிப் போட்ட கஜா புயலால் தென்னை, பலா, தேக்கு, சவுக்கு உள்ளிட்ட பலன் தரும் மரங்கள் ஏராளமான வேரோடு சாய்ந்தன.

இழந்த மரங்களை மீட்டுருவாக்கம் செய்யும் விதமாக தஞ்சையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மேலஉளூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டன.

image

கோடை தொடங்கி கொளுத்தி வரும் வெயிலால் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன இந்த மரக்கன்றுகள். பள்ளி வளாகத்தைச் சுற்றி தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமப் பெண்கள் ஒன்றிணைந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேல் பயணித்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து மரக்கன்றுகளுக்கு ஊற்றி உயிர் கொடுத்து வருகின்றனர்.

image

கடமைக்காக செய்யாமல் உள்ளார்ந்த அக்கறையோடு கொளுத்தும் வெயிலில் இடுப்பிலும் தலையிலும் குடங்களை சுமந்து வந்து தண்ணீர் ஊற்றி வருகின்றனர் இப்பெண்கள். அவர்களது கடின உழைப்பின் பலனாக வாடிய தேக்கு மரக் கன்றுகள் மெல்ல மெல்ல உயிர் பெறத் துவங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments