2 குழுக்களாக சுற்றித் திரியும் காட்டு யானைகள்

0 554

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் 2 குழுக்களாக சுற்றி வரும் காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதியில் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சானமாவு வனப்பகுதியினுள் 7 காட்டுயானைகளும், அமுதகொண்டப்பள்ளி வனப்பகுதியினுள் 3 குட்டிகள் உட்பட 12 யானைகளும் சுற்றி வருகின்றன. அவைகளுக்கு தற்போது வனப்பகுதிக்குள் போதிய உணவும்,குடிநீரும் கிடைக்காததால், கிராம பகுதிகளை நோக்கி வருகின்றன.அப்போது யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதுடன், பொதுமக்களை தாக்கி உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

எனவே யானைகளுக்கு வனப்பகுதிகளில் உணவு,நீர் ஆகியவற்றை ஏற்படுத்தி நிரந்தரமாக யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டுமென ஓசூர் பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments