வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் கைது

0 523

வெனிசுலா நாட்டின் ஆட்சிகவிழ்ப்பிற்காக வன்முறையை தூண்டியதற்காக அந்நாட்டு எதிர்க்கட்சியின் துணை தலைவர் சாம்ப்ரோனாவை, கைது செய்த போலீசார் காருடன் அழைத்து சென்றனர்.

வெனிசுலா நாட்டின் அதிபராக நிகோலஸ் மதுரோ கடந்த ஆண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் உள்ளார். ஆனால் வெனிசுலாவின் நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள, அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, மதுரோவின் வெற்றியை ஏற்க மறுத்து தன்னை இடைக்கால அதிபராக அறிவித்தார்.

மேலும் ராணுவத்தின் ஒரு குழுவினரின் ஆதரவோடு, மதுரோவை ஆட்சியிலிருந்து இறக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். குவைடோவின் ஆதரவாளர்கள் சிலரும் ஆட்சியை கவிழ்ப்பதற்காக ஆங்காங்கே வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வன்முறையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேரை கைது செய்ய வெனிசுலா உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் சாம்ப்ரானோவை காரில் இருந்தவாறே போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments