திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ; காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ

0 711

திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ என்றும், காங்கிரசின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ என்றும் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் ஜீரோ என்று விமர்சனம் செய்தார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரை அவனியாபுரம் பகுதியில் தேர்தல் பரப்புரையின் போது ஸ்டாலின் பேசினார். அப்போது, விவசாயிகளுக்காகவும், பெண்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இடஒதுக்கீட்டுக்காக போராடிய கருணாநிதிக்கு கடைசியில் இடம் கேட்டுப் போராட வேண்டிய நிலை வந்ததாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT