பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடந்த சோதனை நிறைவு

0 1530

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி பாலக்கரை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை நிறைவுபெற்றது.

மதமாற்றம் செய்ய வந்தவர்கள் என்று கூறி சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்துவரும் தேசிய புலனாய்வு அமைப்பினர், திருச்சியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில், பல மணி நேரமாக அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில், பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments