வெனிசுலாவில் அதிபருக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே வலுக்கும் மோதல்

0 271

வெனிசுலாவில், கலவரத்தை தூண்டி ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட எதிர்க்கட்சியின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறியுள்ளார்.

தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிகோலஸ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், வெனிசுலா தலைநகர் கராகாஸில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு மோதல் வெடித்தது.

கலவரத்தின்போது வாகனங்களுக்கு தீ வைப்பு, கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. வெனிசுலா ராணுவத்தின் ஒரு பிரிவினர் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் உள்நாட்டு போர் மூளும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியின் போராட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் நிக்கோலஸ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments