வெனிசுலாவில் அரசுக்கு எதிராக வன்முறை வெடித்தது

0 628

வெனிசுலாவில் அரசுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. வெனிசுலாவின் அதிபராக இருக்கும் நிக்கோலஸ் மதுரோவை எதிர்த்து, அண்மையில் எதிர்கட்சி தலைவர் ஜூவான் குவைடா அந்நாட்டு இடைக்கால ஜனாதிபதியாக தன்னை பிரகடனம் செய்து கொண்டார்.

இருப்பினும், சீனா  மற்றும் ராணுவத்தின் ஆதரவு இருப்பதால் தனது பதவியை விட்டுக்கொடுக்காமல் நிக்கோலஸ் இருந்து வந்தார். இந்தநிலையில், ராணுவத்துடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்ட குவைடா, அரசியல் சாசனத்தை காக்க ராணுவம் மற்றும் பொதுமக்கள் தன்னுடன்  இணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி குவைடாவுக்கு ஆதரவாக கரகாஸ் சாலைகளில் திரண்டு போராட்டம் நடத்திய பொதுமக்களை, ராணுவத்தினர் கல்வீசியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனர்.

இதனால் வன்முறை வெடிக்கவே, 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ராணுவத்தை சேர்ந்த ஒரு பிரிவு கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அதிபர் நிக்கோலஸ், போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments