சீனாவில் ஏற்பட்ட திடீர் புழுதிப்புயல்

0 1146

சீனாவில், திடீரென ஏற்பட்ட புழுதிப்புயல் காரணமாக மக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.

அங்குள்ள ஹுலுன் பியுர்( Hulun Buir) எனும் பகுதிக்கு, மங்கோலிய எல்லையிலிருந்து திடீரென பரவி வந்த புழுதிப் புயலானது, பலத்த வேகத்துடன் சுழல ஆரம்பித்தது.

சுமார் 100 மீட்டர் தூர உயரத்திற்கு எழுந்து வீசிய இந்த புயல், அப்பகுதியின் மேகத்தையே முழுதாக மூடியது.

நீண்ட நேரம் வேகமாக சுழன்று வீசிய இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

காற்றின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்த நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் இந்த புழுதிப்புயல் ஓய்ந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments