சிம்புவின் திருமணம் எப்போது? - கண் கலங்கிய டி.ராஜேந்தர்

0 6453

சிம்புவின் திருமணம் தொடர்பாக பேசிய போது, அவரது தந்தையும், லட்சிய திமுகவின் தலைவருமான டி.ராஜேந்தர் கண் கலங்கினார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய டி.ராஜேந்தர், தன்னுடைய மகன் குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் சிலரை அழைக்காததற்கு வருத்தம் தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு முழுவதும் அவரின் கண்கள் கலங்கிய வண்ணம் இருந்தன. அப்போது சிம்புவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த டி.ராஜேந்தர், இந்த கேள்வியை எதிர்கொள்ளும் நிலைக்கு இறைவன் தன்னை வைத்துள்ளதை எண்ணி ஆதங்கப்படுவதாகக் கூறி கண் கலங்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments