எஜமானரைக் காப்பாற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த நாய்

0 712

எஜமானரைக் கடிப்பதற்கு சீறிய பாம்பை துரத்தி, துரத்தி கடித்துக் குதறிய நாய், தனது உயிரைத் தியாகம் செய்த நெகிழ்ச்சிகர சம்பவம் தஞ்சாவூரில் நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிகாடு நடுத்தெருவைச் சேர்ந்த நடராஜன் என்ற விவசாயி தான் இந்த நாயை வளர்த்து வந்தவர். வெள்ளிக்கிழமை காலை நடராஜன் தோட்டத்திற்கு நடந்து செல்ல, பப்பி நாய் பின் தொடர்ந்து சென்றுள்ளது.

அப்போது நல்ல பாம்பு ஒன்று நடராஜனை கடிக்கச் சீறியுள்ளது. இதைக் கண்ட நாய் பப்பி, பாய்ந்து சென்று பாம்பை கடித்து தோட்டத்திற்குள் இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது.

ஆனால் சிறிது நேரத்தில் நாய் சரிந்து விழுந்து உயிரிழந்தது. நாயின் உடலை சோதித்து பார்த்த போது அதன் உடலில் பாம்பிடம் கடிபட்ட தடயம் இருந்தது.

4 ஆண்டுகளாக பிள்ளை போல் பாவித்து வளர்த்த நாய், தன்னைக் காப்பாற்றி உயிரை விட்டதை எண்ணி நடராஜனும், அவரது குடும்பத்தாரும் கண்ணீர் வடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments