மூன்று நாள் நடைபெறும் பெல்ட் அண்ட் ரோட்ஸ் உச்சிமாநாடு

0 148

பெல்ட் அண்ட் ரோட்ஸ் பொருளாதார உச்சி மாநாடு பெய்ஜிங்கில் இன்று தொடங்குகிறது.

மூன்று நாட்களுக்கு நடைபெறும் இம்மாநாட்டில் சுமார் 150 நாடுகளின் தலைவர்கள், 90 சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

சீனா தனது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த ஆசியா-ஐரோப்பியா-ஆப்பிரிக்கா இடையிலான சாலைவழி பட்டுப்பாதை மற்றும் கடல்வழி பட்டுப்பாதை  அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சீனாவின் பட்டுப்பாதை பொருளாதார மண்டலத்தினால் பலவேறு நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சியும் வர்த்தகமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டின் இறுதியில் சீனாவுக்கும் பல்வேறு நாட்டின் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஊடாக சீனாவின் பட்டுப்பாதைக்கு பாகிஸ்தான் இடம் கொடுத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments