பாஜக MLA மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய இளம்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் மரணம்

0 636

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த பெண்ணின் தந்தை, காவல்நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தில், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பங்கெர்மாவ் ((Bangermau)) தொகுதி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கார், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லம் அருகே இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது, மகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணின் தந்தையை, பாஜக எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் சிலர் தாக்கினர்.

இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், கைது செய்யப்பட்ட இளம்பெண்ணின் தந்தை, காவல்நிலையத்தில் உயிரிழந்தார்.  பாஜக எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் தாக்குதலில் படுகாயமடைந்ததாலேயே, இளம்பெண்ணின் தந்தை உயிரிழந்தார் என தெரியவந்ததால், 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments