காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஹீனா சித்து - பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது

0 498

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டி மகளிர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆறாவது நாளான இன்று, 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹீனா சித்து தங்கப் பதக்கம் வென்றார். பதக்கப் பட்டியலில் இந்தியா 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலத்துடன் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments