நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்க எதிர்ப்பு - விவசாயிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் பேரணி

0 815

நெய்வேலியில் இருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் என்எல்சியை நோக்கி பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தண்ணீர் தரமறுக்கும் கர்நாடகத்திற்கு மின்சாரம் தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி மீட்புக் குழு மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். இதற்காக நெய்வேலி அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட பேரணியில் பதாகைகளுடன் திரளானோர் பங்கேற்றனர்.

பேரணியின் முடிவில் கியூபாலத்தின் அருகே ஆர்ப்பாட்டமும், கண்டனக் கூட்டமும் நடைபெற்றது. இதில்,  பழ.நெடுமாறன், வேல்முருகன், கொளத்தூர் மணி, சுப.உதயகுமார், தியாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அசம்பாவிதங்களை தவிர்க்க 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments