உலகில் மிக உயரமான அருவியில் இருந்து குதித்து இளைஞர் சாதனை

0 2126

உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உலகிலேயே உயரமான நீர்வீழ்ச்சி என்ற பெயரைப் பெற்றது. 3 ஆயிரத்து 212 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியின் உச்சத்தில் இருந்து கீழே குதிக்க விரும்பினார் போலந்து நாட்டைச் சேர்ந்த பாவல் ஜான்கோவெஸ்கி (Pawel Jankowski).

தொடர்ந்து அருவியின் உச்சிக்குச் சென்ற பாவல் அங்கிருந்து குதித்தார். தரையைத் தொடுவதற்கு சில நூறு அடிகளே இருக்கும் நிலையில் பாராசூட்டைப் பயன்படுத்தி பத்திரமாக தரையிறங்கினார் பாவெல்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments