வெனிசுலா நாட்டில் மீண்டும் மின்தடை..!

0 362

வெனிசுலா நாட்டில் மீண்டும் ஏற்பட்ட மின் தடையால் பல ஊர்கள் இருளில் மூழ்கின.

அந்நாட்டின் தலைநகரான காரகசில் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் மின்தடையால் செயலிழந்தன. இதே போன்று நாடு முழுவதும் உள்ள 11 மகாணங்களிலும் திடீரென மின் தடை ஏற்பட்டது.

இது எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட திட்டமிட்ட சதி செயல் என்று குற்றம் சாட்டிய வெனிசுலா தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர்Jorge Rodriguez, உடனடியாக மின் வினியோகம் சீரமைக்கப்பட்டது என்றார். ஆனாலும் சுமார் எட்டு மணி நேரத்திற்கு பின்னரே பல ஊர்களின் மின் வினியோகம் சீரானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வெனிசுலாவின் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையிலான மோதலால் அடிக்கடி மின் வினியோகம் தடை படுவதும், இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கதையாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments