காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களின் சொத்துக்கள் பறிமுதல்

0 808

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் 13 பேரின் சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது.

தீவிரவாத இயக்கங்களுக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள் நிதியுதவி செய்வதாக தேசிய புலனாய்வு அமைப்பு மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது.

இதையடுத்து, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் 13 பேருடைய சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது.

காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி, பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு கடந்த வெள்ளியன்று தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments