சீனாவின் பட்டுப்பாதை வர்த்தகத்தில் இணைந்தது இத்தாலி

0 1363

சீனாவின் புதிய பட்டுப்பாதை வர்த்தகத்தில் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் இத்தாலி கையெழுத்திட்டது.

ஆசியாவில் இருந்து ஐரோப்பா வரை தடையற்ற வர்த்தகத்திற்காக சீனா பட்டுப்பாதை வகுத்து வருகிறது. இது ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் அமைக்கப்படுவதற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜி 7 நாடுகள் அணியைச் சேர்த முதல் நாடாக இத்தாலி சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்துள்ளது.

ரோம் நகரில் சீன அதிபர் சீ ஜின்பிங் (xi jin ping)  இத்தாலியப் பிரதமர் குய்செப் கான்டேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, 5 முதல் 7 பில்லியன் யூரோ வரையிலான 29 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments