தெலங்கானாவின் பணக்கார வேட்பாளர் கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி

0 1024

தெலுங்கானாவின் சிவெல்லா பகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி தனது குடும்ப சொத்து மதிப்பு 895 கோடி என வேட்பு மனு தாக்கலில் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு 223 கோடி ரூபாய்க்கும், அப்போலோ மருத்துவமனையின் பங்குதாரரும் மனைவியுமான சங்கீதா ரெட்டி பெயரில் 613 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மகன்கள் பெயரில் 20 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது பெயரில் 36 கோடி ரூபாய்க்கும், மனைவியின் பெயரில் ஒரு கோடியே 80 லட்ச ரூபாய்க்கும் அசையா சொத்துக்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் விஷ்வேஷ்வர் ரெட்டிதான் பணக்கார வேட்பாளர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments