பாதை மாறிய தாய் பார்த்த சிறுமி கொலை..! கண்ணை மறைத்த காதல்

0 5402

ஊட்டியில் 10 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடல் நலக்குறைவால் பலியானதாக நாடகமாடிய தாய் கைது செய்யபட்டுள்ளார். கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தவரின் பாதை தவறிய பயணத்தை பார்த்து விட்டதால் நிகழ்ந்த பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

உதகை கோடப்பமந்து அம்பேத்கார் காலனி பகுதியில் வசித்து வந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ராஜலட்சுமி. இருவரும் உதகை தனியார் பள்ளியில் சமையல் வேலை செய்து வந்தனர். கடந்த சிலஆண்டுகளுக்கு முன் கருத்துவேறுபாடு காரணமாக ராஜலட்சுமியிடம் இருந்து கணவர் ஜெகநாதன் பிரிந்து சென்று விட்டார். தனது 10 வயது மகளுடன் ராஜலட்சுமி தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் தனது மகள் உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்து விட்டதாக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச்சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுமியின் கழுத்தில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

ராஜலெட்சுமியை பிடித்து விசாரித்த போது சிறுமி கொல்லப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் சிறுமி கொலை குறித்து திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

கணவர் பிரிந்து சென்ற பின்னர் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த ராஜலெட்சுமிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் மூலம் சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் தனிமையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.

நேற்றுமுன்தினம் ராஜலட்சுமி ஒருநபருடன் தனிமையில் இருந்ததை அவரது மகளான சிறுமி உஷாராணி நேரடியாக பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. தனது தகாத உறவு வெளியில் தெரிந்துவிடும் என்று பயந்த ராஜலட்சுமி தனது மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

இந்த கொலையை மறைப்பதற்காக சிறுமியின் சடலத்தை உதகை அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வருவது போல் வந்து சிக்கிக் கொண்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக, அவருடன் தொடர்பில் இருந்த இளைஞரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

ஆண் நண்பர்களின் விபரீத சகவாசத்தால், ராஜலெட்சுமியின் பாதைமாறிய பயணம் அவரை கொலைகாரி பட்டத்துடன் சிறையில் தள்ளியிருப்பதாக சுட்டிக் காட்டுகின்றனர் காவல்துறையினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


  • அன்னைதாசன்

    இவள போன்ற நாதாரிகளால் ஆண்களுக்கு அவப்பெயர்