கலிபோர்னியாவில் வண்ணத்துப் பூச்சிகளின் வலசை தொடங்கியது

0 484

அமெரிக்காவில் வண்ணத்துப் பூச்சிகளின் வருடாந்திர வலசை தொடங்கியுள்ளதால் வானம் முழுவதும் வண்ணத்துப் பூச்சி மயமாகக் காட்சியளிக்கிறது.

image

பெயிண்டட் லேடி ((painted lady butterfly)) என்ற பெயர் கொண்ட வண்ணத்துப் பூச்சிகள் கலிபோர்னியாவில் இருந்து வடக்கு பசிபிக் பகுதிக்கு தங்கள் ஆண்டு வலசையைத் தொடங்கி உள்ளன. தற்போது பசிபிக் பகுதியில் மழை பெய்து தாவரங்கள் செழித்தோங்கி வளர்ந்திருப்பதால் இந்த வண்ணத்துப் பூச்சிகள் இடம் பெயர்ந்து செல்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

image

image

ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு பயணம் செய்யும் பட்டாம் பூச்சிகள் தங்கள் இனவிருத்தி முடிந்ததும் மீண்டும் கலிபோர்னிய காட்டுப் பகுதிக்கு திரும்பி வரும் பழக்கம் கொண்டவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments