காவலில் சிறுவன் தாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளது உடற்கூறு ஆய்வறிக்கை மூலம் தெளிவாகிறது

0 561

சட்டவிரோத காவலில் போலிசார் தாக்கியதில் இறந்து போனதாக கூறப்படும் சிறுவனின் உடலை, உடற்கூறாய்வு செய்யாமல் கொடுத்தது ஏன்? என்பது பற்றி பதிலளிக்க, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த ஜெயா என்பவர் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி முன், புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, உடலை தோண்டியெடுத்து செய்த உடற்கூறாய்வு அறிக்கையில் கடுமையாக தாக்கப்பட்டிருப்பது தெரியவருவதாக நீதிபதி கூறினார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, சமூக நலத்துறையின் நன்னடத்தை அலுவலரும், காவல் துறையினர் சிறுவனை அடித்து துன்புறுத்தியிருப்பதை உறுதி செய்திருப்பதாக நீதிபதி சேஷசாயி தெரிவித்துள்ளார்.

சிறுவனின் உடலை ஏன் பிரேத பரிசோதனை செய்யவில்லை? என்றும், சிறுவனின் உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தி கையொப்பம் வாங்கியது யார்? என்பது பற்றியும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி சேஷசாயி, வழக்கை, வருகிற 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments